வீட்டின் அலுமாரியில் வெடிகுண்டுகள்: ஓய்வுபெற்ற உயரதிகாரி கைது!

பாதுக்க, அருக்வத்த பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் தர அதிகாரி ஒருவர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, குறித்த நபரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மோட்டார் செல் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு வரவழைக்கப்பட்டு இக்குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? மூடப்படும் சுத்திகரிப்பு நிலையம்!

Leave a Reply