பொலிஸாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்! தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு

பொலிஸாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வடமாகாணப் பணிப்பாளர் சீ.ஏ.மோகன்ராஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகம் யாழ் மாவட்ட செயலகத்தின் 55ஆம் இலக்க அறையில் தற்போது இயங்கி வருகின்றது.

இங்கு பொது மக்கள் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும். நேரடியாக அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும்.

அல்லது 0212222321 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதுடன், எழுத்து மூலமான முறைப்பாட்டை கிராம அலுவலரின் மேலொப்பத்துடன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க முடியும்.

மேலும், 1960 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியும் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கிராம அலுவலர் ஊடாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? மூடப்படும் சுத்திகரிப்பு நிலையம்!

Leave a Reply