மூதூர் இறால் பாலத்தை புனரமைக்க கோரி கையெழுத்து வேட்டை

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள இறால் பாலத்தை புனரமைக்கும் பொருட்டு, பொதுமக்களின் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் இப்பாலத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மாடுகள் இரண்டு உயிரிழந்தன.

இது தொடர்பில் இதுவரை எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிடவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட மகஜரிலேயே பொதுமக்கள் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இறால் பாலத்தினூடாக பயணிக்கும் அனைவரும் இம்மகஜரில் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு நேற்று வந்த கட்டைபறிச்சான் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ந.கரிஹரகுமார், பிரதேச சபைத் தவிசாளரின் உதவியுடன் பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply