சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வந்த கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
MARRINE TRAFFIC இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, மெதிரிகிரிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகள் சேதன உரத்தை பயன்படுத்தி இம்முறை விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனடிப்படையில், வெற்றிகரமான முறையில் அறுவடை செய்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.






