
மேல் மாகாணத்தில் நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர காலப்பகுதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை பரிசீலிப்பதற்காகவே இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு மணிநேர சோதனை நடவடிக்கையில், 451 பொலிஸ்அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ் மற்றும் 505 வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





