மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள் மற்றும் கை கோடாளி என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவில் சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் ஒரு குழு சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக ஆறு வாள் மற்றும் கை கோடாளி ஒன்று என்பற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.
இதேவேளை, ஏறாவூர் நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






