இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக, யாழ் இந்திய துணைத் தூதரகம் இரத்ததான முகாமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்வத்தின் ஒரு பகுதியாக யாழ். வை.எம்.சி.ஏயுடன் இணைந்து, இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரத்ததான முகாம், நவம்பர் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை இல 109, கண்டி வீதியில் அமைந்துள்ள யாழ் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உயிர்காக்கும் இரத்ததான நிகழ்வில் இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளோர் அன்றைய தினம் நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து கொள்ளமுடியும்.






