இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கல் மீண்டும் ஆரம்பம்: முக்கிய நாடு அறிவிப்பு

இலங்கை பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலய முகநூல் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில்,

இந்தியா அழைக்கிறது! இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் இன்று முதல் வழங்கப்படும்.

வருகை தந்து இந்தியாவின் அழகையும், பன்முகத்தன்மையையும் ரசித்து மகிழுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply