
ரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ், இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இன்றும் இருப்பதை உணரமுடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடை செய்யுங்கள் என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தைப் பிரிட்டன் வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதற்கான செயல் வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.
இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






