தமிழகம் அகதி முகாமில் இருந்தவர்களை படகில் ஏற்றி வந்து மன்னாரில் இறக்கி விட்டுச் சென்ற தமிழக மீனவர்கள் நால்வர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடந்த 12 ஆம் திகதி இரவு இலங்கையை சேர்ந்த மூவரை ஓர் படகில் ஏற்றி வந்து மன்னார் கரையில் இறக்கிவிட்டு தமிழகம் திரும்பிய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கையரை ஏற்றி வந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு படகு மூலம் இலங்கைக்கு வந்தவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சியில் விபத்து: மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!






