குருநாகல், பனாகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தனது தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
பனாகமுவ, கோபாலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது நபரைக் கைதுசெய்துள்ள போகஸ்வெள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






