கொரோனா காவு 23!

நாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 23 கொரோனா உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 10 பேர் ஆண்கள் என்றும், 13 பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் 17 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply