சவேந்திர சில்வாவுக்கு தடை வலியுறுத்துகின்றார் சாரா!

இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ், அந்த நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
என்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் நடந்த போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணர முடிகின்றது.
அது மட்டுமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும். இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்.- என்றார்.

தொழிற் கட்சியின் சார்பாக பிரிட்டன் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு 2017 ஆம் ஆண்டு சாரா ஜோன்ஸ் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.

Leave a Reply