
கொழும்பு, ஓக 23
உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் காணப்படும் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் காணப்படும் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உணவிப் பணவீக்க பட்டியலில் லெபனான் முதல் இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிம்பாவே 2ஆவது இடத்திலும், வெனிசுலா மூன்றாவது இடத்திலும், துருக்கி நான்காவது இடத்திலும் பெயரிடப்பட்டுள்ளன. இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளாக ஈரான், ஆர்ஜென்டினா, சுரினாம், எத்தியோப்பியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




