நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது அளவு ( பூஸ்டர்) நாளை(16) முதல் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்கள் ஆனவர்களுக்கே ஃபைசர் தடுப்பூசி பூஸ்டராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது டோஸாக வழங்கப்பட்ட தடுப்பூசியின் வகைகள் எதுவாக இருந்தாலும், தனிநபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி பூஸ்டராக வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply