இரத்தினபுரி மத்திய பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள வெதுப்பகத்தில், எரிவாயு தாங்கி வெடித்ததில் பெண்ணொருவர் உட்பட ஐவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், எரிகாயங்களுக்குள்ளான ஐவரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த வெதுப்பகத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.






