
யாழ், ஓக 23
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா ( 23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.