ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வுகளில் இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா பாடவுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்வு டுபாயின் உலக வர்த்தக நிலையத்தில் நடாத்தப்பட உள்ளது.
மெனிகெ மகே ஹித்தே என்ற பாடல் மூலம் யொஹானி புகழின் உச்சத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






