கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது தடுப்பூசியினை 43 வீதமானவர்களும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 வீதமானவர்களும், வவுனியா வடக்கில் 35 வீதமானவர்களுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 4வது தடுப்பூசியான பைசரை வெளிநாடு செல்பவர்கள் மாத்திரமே குறைந்தளவில் செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசிகளை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறித்தியுள்ளனர்.

Leave a Reply