மட்டக்களப்பு விகாராதிபதியின் செயலுக்கு எம்.இராஜேஸ்வரன் கண்டனம்

செ.பேரின்பராஜா

இனங்களுக்கிடையே ஒற்றுமை சமாதான சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவதற்காக இறை சிந்தனையோடு கருமமாற்ற வேண்டியவர்களே சமத்தலைவர்கள்.
இதனைவிடுத்து இந்நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் சயத்தலைவர்கள் செயற்படுவார்களேயானால் இனம் மதம் பாராது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியதாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் யாவரும் அரச இயந்திரத்தை விளைதிறன்மிக்கதாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் கொண்டு நடாத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அண்மையில் மட்டக்களப்பு விகாராதிபதி மட்டக்களப்பு மண்முனை மேற்கு பட்டிப்பளை  பிரதேச செயலகத்துக்குள் புகுந்து அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்தி கெட்ட வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான இழிசெயலை செய்துள்ள போதிலும் சட்டத்தின் பாதுகாவலர்களான பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமை இவரின் செயற்பாட்டை ஊக்குவிப்பதாகவே உள்ளது.

இனகிமேலும் இவரது அடாவடித்தனங்கள் அரங்கேறுமாயின் மக்களை ஒன்று திரட்டி நீதிக்காக போராடுவதற்கு நாம் தயங்க மாட்டோம் என்பதை இத்தருணத்தில் தெரிவிப்பதுடன் இவ்விடயம் தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply