வவுனியாவில் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு: விறகுக்கு மாறும் மக்கள்!

நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து பொதுமக்கள் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் அலைந்து திரிவதையும் வவுனியாவில் விறகு கொள்வளவு செய்வதற்கு மக்கள் மாற்றமடைந்து வருவதால் விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது..

விறகு வியாபாரிகள் தூர இடங்களுக்கு சென்று விறகுகளை துவிச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிவந்து நகரிலுள்ளவர்களுக்கு விற்பனை செய்வதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

எரிவாயுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றதால் எரிவாயு பெற்றுக்கொள்வதை தவிர்த்துவிட்டு விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு விறகு துவிச்சக்கரவண்டியில் ஆயிரத்தி எண்ணூறு ரூபாயாகவும் மோட்டார் சைக்கிளில், எடுத்துவரும் விறகு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply