கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்!

மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற கொரோனா வைரஸுக்கு எதிரான மாத்திரையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள இந்த மாத்திரையை குறித்த நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்த உற்பத்தியாளர்களின் உள்ளூர் முகவர்கள் இது தொடர்பாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக மோல்னுபிராவிர் மருந்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை கொரோனா தொழில்நுட்பக் குழு நவம்பர் 15ஆம் திகதிவழங்கியது.

இந்த மாத்திரை அமெரிக்க மருந்து நிறுவனங்களான Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கொரோனா நோய்க்கான முதல் வைரஸ் தடுப்பு மருந்தாகும், இது ஊசி அல்லது நரம்பு வழியாக கொடுக்கப்படுவதை விட மாத்திரையாக எடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply