வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியருக்கு, பாடசாலைக்குள் சென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவரைப் புகைப்படம் எடுத்த முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாடசாலையின் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாடசாலையில் வகுப்புக்கள் இடம்பெற்றபோது, முன்னர் அங்கு கடமையாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள் சென்று வகுப்பு ஆசிரியர்களுடன் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவரது கைத்தொலைபேசியில் புகைப்படம் பிடித்துள்ள சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆசிரியருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆசிரியர்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியபோது ஓய்வு பெற்றுச் சென்ற பாடசாலையின் அதிபருடன் பல்வேறு முரண்பாடுகளையும் பாடசாலை சமூகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நடவடிக்கையில் செயற்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை குறித்த ஆசிரியரின் நடவடிக்கை பாடசாலைக்கும் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் மன உழைச்சல்களை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்
வவுனியாவில் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு: விறகுக்கு மாறும் மக்கள்!






