பெற்றோல் குண்டு வீச 30 ஆயிரம் ரூபாய்; யாழில் சிக்கிய இளைஞர்கள்!

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீசியதுடன் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மற்றும் உடுவில் பகுதிகளைச் சேர்ந்த 22, 18 வயதுகளையுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

10.10.2021 அன்று யாழ்ப்பாணம் ஏ09 நெடுஞ்சாலையில் அரியாலைப் பகுதியில் இரவு வேளையில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீசப்பட்டதுடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.

குறித்த சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் ஈடுபட்டிருந்தமை தொடர்பிலான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.

தமக்கு வெளிநாட்டிலிருந்து ஒருவர் 30 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும், அதற்கு அமையவே தாக்குதல் நடத்தியதாகவும், யாழ்ப்பாணத்தின் வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுடனும் தமக்குத் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

Leave a Reply