வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம். சந்திரகுமார தெரிவித்தார்.
கோழிக்கடை வீதியில் வைத்து 38 வயதுடைய கண்ணகிபுரத்தை சேர்ந்த நபரொருவர், ஆயிரம் போதை மாத்திரைகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட நாட்களாக குறித்த பகுதியில் சூட்சமான முறையில் தச்சுத் தொழிலாளி போன்று காட்டிக் கொண்டு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய விசேட பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட மிக நீண்ட நேரப் பிரயத்தனத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம். சந்திரகுமார தெரிவித்தார்.
அத்துடன், இவர் போதை மாத்திரைகளைக் கொண்டு வருவதற்கு பயன்படுத்திய துவிச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு: இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!






