தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியசாலையிலிருந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உருளைக்கிழங்குகள் அடங்கிய கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகளால் இந்தக் கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 40,000 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த உருளைக்கிழங்குகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உருளைக்கிழங்கு தொகையைப் பாவனைக்குப் பயன்படுத்தும் வகையில் சேவையாளர்களை கொண்டு பொதி செய்து சந்தைக்கு விநியோகிக்கத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு காய்ச்சல் எனக்கூறி வீட்டிற்கு துரத்தி அதிபர் அடாவடி! யாழில் சம்பவம்






