இன்றுதொடக்கம் 3ஆவது தடுப்பூசி!

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 03 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவதாக எந்தவகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply