தனிமைப்படுத்தல் சட்டமே அரசாங்கத்தின் ஆயுதம்! பாட்டலி

தனிமைப்படுத்தல் சட்டம் அரசாங்கத்தின் ஆயுதமாகப் பாவிக்கப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் சுகாதார வழிகாட்டல்களை மீறிச் செயற்பட்டமையால் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது .

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அரசாங்கத்தின் ஆயுதமாகப் பாவிக்கப்படுகின்றது.

சுகாதார சட்டதிட்டங்களை அரசின் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க மக்கள் முன்வர வேண்டுமென மேலும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆழ்கடலில் காணாமல்போன படகு! பொலிஸார் விடுத்த வேண்டுகோள்

Leave a Reply