கால்வாசி மதுபான போத்தல்கள் தயாரிப்பதைத் தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
17-30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 40 சதவீதமானோரும்இ 31-45 வயதுக்கு இடைப் பட்டவர்களில் 35 சதவீதமானோரும்இ 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 சதவீத மானோரும் கலந்து கொண்ட இந்த ஆய்வில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபான போத்தல்கள் தயாரிப்பதைத் தடை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத் துள்ளதாகவும் தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மது ஒழிப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் கலந்து கொண்ட 72 சதவீதமானோர் கால்வாசி மதுபான போத்தல்களைத் தடை செய்ய வேண்டும் எனக் கருத்து கூறியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.






