நாட்டில் கொரோனா தீவிர பரவல்: எச்சரிக்கும் தொழிற்சங்கம்

கொழும்பு,ஓக 23

நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பயங்கரமான வைரஸ் அடிமட்டத்தில் இருந்து கட்டுப்பாடில்லாமல் பரவிவருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவ ர்உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நோய் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனா பாதிப்புக்களாகவே அடையாளம்காணப்பட்டன.

இருப்பினும் இந்த கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை.

எனவே, கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படாமல் பல சமூகக்கூட்டங்கள் இப்போது நடைபெறுகின்றன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவினால், இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது  தமது தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல்ரோஹன எச்சரித்துள்ளார்.

Leave a Reply