புத்தளம் மதுரங்குளி கமநல கேந்திர நிலையத்திற்கு உட்பட்ட புளிச்சாக்குளம் இரட்டைக்குளம் பகுதி உடைப்பெடுத்தமையினால் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் வேளாண்மை செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து, உடைப்பெடுத்துள்ளது.
இதனால், குறித்த குளத்திற்கு கீழ் உள்ள ஒன்றரை மாதம் கொண்ட வேளாண்மை நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது உரப் பிரச்சினைக்கு மத்தியில் தாம் வேளாண்மையை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு குளம் உடைப்பெடுத்து பாரிய அழிவினை ஏற்படுத்தியமையால் தாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, உடைப்பெடுத்த குறித்த குளம் முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் ஆலோசனையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து பொதுமக்களும் புனரமைப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.








