நுவரெலியா – நிவ்வெளிகம காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகில் இருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை நிவ்வெளிகம பகுதியில் உள்ள இரண்டு சிறுமிகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் சென்ற போது, ஒரு சோடி பாதணி, தொலைபேசி என்பவற்றை கண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கொழுப்பில் உள்ள தனது தந்தையாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை தொலைபேசி ஊடாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது, குறித்த பகுதியில் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோடி பாதணி, தொலைபேசி என்பன குறித்த இளைஞனுடையது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






