இலங்கை முன்னணி நடனக் கலைஞருக்கு ‘பத்ம ஶ்ரீ´விருது

இலங்கையின் பழம்பெரும் நடனக் கலைஞர் கலாநிதி விஜிர சித்ரசேனவிற்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ´பத்ம ஶ்ரீ´ விருது வழங்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, 2020ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்காக விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய ஜனாதிபதியினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லேவினால் அலரிமாளிகையில் வைத்து இன்று இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கையின் நடனக் கலையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு இந்திய அரசாங்கத் தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply