நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான மணல் கொள்ளை தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு,நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த பகுதிகளில் ஒரு அணி உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், ஏனையவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு இடங்களிலும் இந்த மணல் ஏற்றப்படுவதாகவும், இது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு உட்பட பலரிடமும் தொடர்ச்சியாக முறையிட்டும் எந்தவிதமான. பலனும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மூன்று, நான்கு வருடங்களிற்க்கு மேலாக இவ்வாறான திருட்டு மணல் அகழ்வு அதிகரித்திருப்பதாக தெரிவித்ததுடன், இதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துளார்.






