பாலத்தினை அமைக்கக்கோரி போராட்டம் செய்த மக்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் இன்று புதன்கிழமை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும் தெரியவருகையில்,

பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் குறித்த பாதையில் உள்ள பாலத்தினை புதிதாக அபிவிருத்தி செய்து தருவதாக கடந்த மார்ச் மாதமளவில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மழை காலம் வருவதற்கு முன்னர் புதியபாலம் அமைத்து தருவதாக கூறி பயன்பாட்டிலிருந்த குறித்த பாலத்தினையும் முற்றாக அகற்றியுள்ளனர்.

இவ்வாறு அகற்றப்பட்ட பாலம், பல மாதகாலம் கடந்த நிலையிலும் அதனை புனரமைப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், பிரதேச மக்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மக்கள் அவசர தேவைக்காக வைத்தியசாலைக்கு செல்வதாயின் இப்பகுதிக்கு நோயாளர் காவுவண்டி செல்ல முடியாத நிலையிலுள்ளதுடன், நீண்ட தூரம் நடந்து சென்று நோயாளர் காவு வண்டியில் செல்லவேண்டி உள்ளதாகவும், தெரிவித்தனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள் சுத்தமான உடை அணிந்து செல்லமுடியாத நிலையும் உள்ளதாக குறிப்பிட்டனர்.

இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறுவதன் காரணமாகவும் தமது பகுதியில் வீதிகள் மிகவும் சேதமடைந்துள்ளதுடன், தற்பொழுது தனியார் ஒருவரினது காணியின் ஊடாகவே பயணிக்கவேண்டியுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply