கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி இன்று 830 ரூபாவிற்கு விற்கப்பட்டது.

அதன்படி, 3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும், கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply