வரவு-செலவு திட்டத்தை எவர் விமர்சித்தாலும் நாங்கள் வரவேட்கின்றோம்! க.கணகராஜ்

எவர் எந்த வகையில் விமர்சித்தாலும் நடைமுறைக்கு பொருத்தமான வரவு-செலவு திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டம் காணப்படுவதால் நாங்கள் இந்த திட்டத்தை வரவேட்கின்றோம் என்று, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிர்ஸின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவருமான கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு சுமையில்லாமல் இருப்பவர்கள் என்று நிதி அமைச்சர் குறிப்பட்டது மட்டுமன்றி வீடமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக (லயன்) தொடர் குடியிருப்புக்களை இல்லாது ஒழிப்பதற்காக 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

இதனை பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக விமர்சிக்கின்றனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சமர்ப்பித்துள்ள வரவு-செலவு திட்டம், முன்னேற்றகரமான பல்வேறு விடயங்களைக் கொண்டுள்ளது.

இதுவரை காலமும் இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 4,000 வீட்டுத்திட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தவர்கள், இந்த 500 மில்லியன் ரூபாய் போதுமா என்று கேட்கின்றார்கள்.

இவர்கள் நல்லாட்சி காலத்தில் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தபோது ஒரு வருடத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் நிதியை கொண்டு 500 வீடுகள் அமைத்திருந்தாலும் ஐந்து வருட காலப் பகுதியில் 2,500 வீடுகள் அமைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாதவர்கள் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தை வைத்துக்கொண்டு நிதி அமைச்சரின் வரவு-செலவு திட்டத்தை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

அந்தவகையில் நாங்கள் வரவு-செலவு திட்டத்துக்கு அப்பாற் சென்று பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கிறோம்.

பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக ஆசிரியர் உதவியாளர்களின் நியமனம்.

மத்திய மாகாணத்தில் 200 பேருக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உரிய தரப்பினருடன் பேசுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply