
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவ்வாறு நாடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் விரிவான விவாதமொன்று இடம்பெற்றது. எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.” – என்றார்.





