ஐயன்கன்குளத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள எட்டு பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது
ஐயன்கன்குளம் பொலிசாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/871/21 வழக்கினூடாக ஐயன்கன்குளம் பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
இதனடிப்படையில் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் எட்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துயன் ,சங்கரப்பிள்ளை நாகரத்தினம் ,காசிப்பிள்ளை கருணாகரன் ,கந்தசாமி சந்திரசேகரன்,தங்கராசா நிறஞ்சன் உள்ளிட்ட எட்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது






