நாட்டில் அலி சப்ரி, ஞானசார தேரர் மற்றும் சரத் வீரசேகரவின் சட்டங்களே செயற்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டங்களுக்கு வருவோர் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று எழுந்த சர்ச்சையின்போது கருத்து வெளியிடும்போதே சமிந்த விஜேசிறி இதனைக் கூறினார்.
மேலும் “நாட்டில் மூன்று சட்டங்கள் உள்ளன. முதலாவது நீதி அமைச்சர் அலி சப்ரியின் சட்டம், இரண்டாவது ஞானசார தேரரின் சட்டம், மூன்றாவது சரத் வீரசேகரவின் சட்டம்.
இவற்றில் எந்தச் சட்டத்தைச் செயற்படுத்தி தற்போது பேரணியில் கலந்துகொள்ள வருபவர்கள் தடுக்கப்படுகின்றனர்?” – என்று கேள்வி எழுப்பினார்.






