செயற்கைத் தட்டுப்பாட்டை மக்களே ஏற்படுத்துகின்றனர்!

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தாராளமாக உள்ளது என்று வடக்கு மாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் எமக்குக் கூறியுள்ளார். எனவே, பொதுமக்கள் எரிபொருளை அதிகளவில் கொள்வனவுசெய்வதால்தான், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதேதவிர, எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வழமைபோன்று எந்நேரமும் எரிபொருள் கொள்வனவுசெய்யமுடியும்.

இவ்வாறு, யாழ்ப்பாண மாவட்டசெயலர் க.மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு என்ற விடயம், யாழ்ப்பாண மாவட்டத்தில் வதந்தியால் ஏற்பட்ட நிலைமை என்றே நாங்கள் கருதுகின்றோம். தேவையான எரிபொருள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கையிருப்பில் உள்ளது.
மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

வடக்கு மாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளருடன் நாம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது நேற்றைய நிலைமையில், காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலையில் 26 லட்சம் லீற்றர் டீசலும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோலும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெயும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 66 ஆயிரம் லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோல் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கொண்டுவரப்படுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. என்றார்.

Leave a Reply