வொசிங்டன், நவம்பர் 18 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள், மற்றும் உலகத் தமிழர் பேரவையின் (Global Tamil Forum) பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் தாம் வொசிங்டனில் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றமையை நேற்று நள்ளிரவு அமெரிக்கத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறி வித்தது.
அமெரிக்கா சென்ற சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அங்கு பல்வேறு குழுக்களுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, கடந்த 15 ஆம் திகதி இலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும் அமெரிக்காவில் மிக முக்கியமானதொன்று எனவும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையுடன் புலம்பெயர் உறவுகளுடனும், ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு அலுவலகள் திணைக்கள பதில் செயலாளருடனான லிசா பீற்றர்சனுடனான் ஓர் சந்திப்பு இடம்பெற்றது.
இதனையடுத்து, அன்றைய தினமே அமெரிக்காவின் நிறைபேறுகால நீதிக்கான பிரிவு மற்றும் பொறுப்புக்கூறல், சர்வதே குற்றங்களால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கையில் உள்ள சிறுபான்மை குழுக்களின் கருத்துக்களையும் முறைப்பாட்டையும் கருத்தில்கொள்வது நல்லிணக்கத்திற்கு மிக முக்கியமானதொன்று எனக் குறிப்பிட்டுள்ளனர்.







