ஆயர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்! மறவன்புலவு சச்சிதானந்தன்

வரலாற்றுத் தவறான தீர்மானத்தை எடுத்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சொல்ல வேண்டும். அதுவரை கத்தோலிக்க ஆயர்களுக்கு எதிரான தமிழரின் போராட்டம் தொடரும் என ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ஆவது சனிக்கிழமையை போரில் இறந்தவர்களை நினைவுகூருமாறு அண்மையில் வடக்கு, கிழக்கு ஆயர்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிக்கை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

திருக்கேதீச்சர வளைவை உடைத்தனர் கண்டிக்க மறுத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம். பிள்ளையார் சிலையை உடைத்து அகற்றி அந்தோனியார் சிலை வைத்தனர் பொறுமை காத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம்.

இப்பொழுது போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றியுள்ளனர். தமிழரின் வாழ்வியலையே தீர்மானிப்பவர் கத்தோலிக்க ஆயர் கூட்டம் என்ற மிதப்பில் நினைப்பில் திமிரில் பிள்ளையார் சிலையை உடைத்து அந்தோணியார் சிலையை வைத்ததுபோல, திருக்கேதீஸ்வர வளைவை உடைத்து நந்திக் கொடியைக் காலால் மிதித்தது போல? துயிலும் இல்லத்தை உடைக்கக் கோருவது போல போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றுவதாகக் கூறுகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக்கடிக்க வந்துள்ளனர் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தார்.

துயிலும் இல்லங்களை உடைத்தெறியும் நிலைக்குச் சமமான நிலையே இறந்தோர் நினைவு நாளை மாற்றும் நிலை என்கின்றார் ஐங்கரநேசன். சைவர்களின் தமிழர்களின் இறந்தோர் நினைவு நாள்களைத் தமிழர் அல்லாதவர் தீர்மானிக்கலாமா? எனக் கேட்கிறார் சைவப் பெரியார் ஆறு.திருமுருகன்.

கூடாரத்துக்குள் ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த அரபு நண்பரின் கதை ஆகிவிட்டதே தமிழர் நிலத்தில் கத்தோலிக்கருக்கு இடம்கொடுத்தது என்று அங்கலாய்ப்பர் தமிழ் உணர்வாளர். தமிழரைப் புண்படுத்திய தீர்மானம் தமிழ் உணர்வுகளை உடைத்தெறிந்த தீர்மானம், போரில் இறந்த நினைவுநாள் தொடர்பான ஆயர் கூட்டத்தின் தீர்மானம் கொடுமையானது.

அந்தத் தீர்மானத்தை மீளப்பெறுகிறோம். வரலாற்றுத் தவறான தீர்மானத்தை எடுத்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சொல்ல வேண்டும். அதுவரை கத்தோலிக்க ஆயர்களுக்கு எதிரான தமிழரின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

மாவீரர் தினமான நவம்பர் 27 விளக்கேற்ற அனுமதியுங்கள்: முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை!

Leave a Reply