கீரிமலையில் சிவபூமி முதியோர் இல்லம் திறந்துவைப்பு!

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சாதனைத் தமிழன், துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் குறித்த முதியோர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதுவராலய அதிகாரி, யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், அமெரிக்கா காவா ஆதீன தொண்டுநாத சுவாமி மற்றும் மதத்தவர்கள், சமூக ஆர்வலர்களின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக முதியோர் இல்லம் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply