சேதனப்பசளை பொதியிடல் நிலையங்களை பார்வையிட்ட ஜனாதிபதி!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும், சேதனப் பசளை பொதியிடல் நிலையங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஓயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தையில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன.

காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, வடமத்திய மாகாணத்தில் உள்ள 35 மையங்களில் நீர்மஞ்சள், கோழிக் கழிவுகள், உலர் சாணம் போன்றவற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி சேதனப்பசளைகளை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த ஆணைக்குழு, பெரும்போக விவசாயத்துக்காக 50,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளைகளை உற்பத்திச் செய்ய எதிர்பார்க்கிறது.

கீரிமலையில் சிவபூமி முதியோர் இல்லம் திறந்துவைப்பு!

Leave a Reply