மாவீரர்தினத்தை அனுஸ்டிப்பதற்கு வவுனியாவில் 8 பேருக்கு தடை உத்தரவு!

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதின்றம் 8 பேருக்கு தடை உத்தரவை வழங்கியுள்ளது.

அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் கோ.ராஜ்குமார், தலைவி கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கயேந்திரகுமார், சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நபர்கள் வவுனியா பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12 மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!

Leave a Reply