ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 45 இந்திய பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹம்பந்தோட்டை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் குறித்த சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 45 இந்திய பிரஜைகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள், ஹம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் தமிழர்கள், சிங்களவர், இந்தியர்கள் உள்ளடங்களாக 1,160 ஊழயிர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 480 இந்தியர்கள் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.






