எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசிகள் மாத்திரமே இறக்குமதி! சன்ன ஜயசுமண

எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசியை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களை வழங்குவதற்கு போதுமான ஏனைய தடுப்பூசிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதும்இ பூஸ்டர் டோஸை வழங்குவதும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன்இ 14.5 மில்லியன் பைஷர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படிஇ தேவையான தடுப்பூசிகளை வாராந்த அடிப்படையில் விநியோகிக்க உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் சமையல் எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள்

2700 ரூபாவிற்கு விற்க்கப்பட வேண்டிய 12.5 மப சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பதுக்கலை செய்து 3000 ரூபவிற்கு விற்கப்படுவதை கண்டித்து புத்தளம் அனுராதபுர வீதி தனியார் சமையல் எரிவாயு விநியோக நிலையத்துக்கு முன்னால் மக்கள் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சமையல் எரிவாயு விற்பனை நிலைய முகவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு புத்தளம் பொலிஸார் வருகைத் தந்தனர். இதன்போது சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்வதாகக் கூறி பொலிஸாருடன் பொதுமக்கள் முறன்பட்டனர்.

இதன்போது சமையல் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு சமையல் எரிவாய்வை அரசாஙம் நிர்ணயித்த உரிய விலைக்கு விற்கவேண்டும் இல்லாவிட்டல் கைது செய்யப்படுவீர் என பொலிஸார் எச்சரித்தனர்.

இதன்போது உரிய விலைக்கு சமயல் எரிவாயுவை விற்பனை செய்வதாக முகவவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply