
பாண்டிருப்பு கடற்கரை வீதி கடலரிப்புக் காரணமாக கடலுக்குள் ஒரு பகுதி உள்வாங்கப்பட்டிருந்தது. கடலரிப’புக் காரணமாக கடல் மண்கள் வீதியிலே குவிந்து காணப்பட்டது. தற்போது கடலரிப்பு ஓரளவு அடங்கியிருந்தாலும் கடற்கரை வீதியில் கடல் மணல்கள் குவிந்தவாறே உள்ளது. இவ்வீதியால் வாகனங்கள் பயணிக்கும் போது சருக்கிவிழுந்து விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. எனவே , வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை அலுவலகம் பாண்டிருப்பு கடற்கரை வீதியில் குவிந்துள்ள கடற்கரை மணல்களை கடற்பக்கமாக அகற்றுவதற்கு உடனடியான கடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





