போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில், ஹெரோயினுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைய, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அய்லப்பெரும பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 12 கிராம் 68 மில்லிகிராம் ஹெரோயினுடன் கோரகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிராண்ன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாதம்மாவத்தை, தொட்டலங்க ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புகளில் 17 கிராம் ஹெரோயினுடன், ஒருகொடவத்த, கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 31 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில், 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவில், 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கழிவு நீர் முகாமைத்துவ அமைப்புகள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்! பிரதமர்






